கேரளம், மேற்கு வங்காளத்தில் சட்டமன்றங்கள் கலைப்பு – அசாமில் 12ஆம் தேதி பதவி ஏற்பு விழா.
பரபரப்பு!
பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை – ஒரே பரபரப்பு!
ரோபோ என்ன செய்யும்?
தென்கொரியாவில் புத்தரின் பிறந்த நாள் விழா கொண் டாட்டத்தில் ரோபோவை புத்த துறவியாக அங்கீகரிக்கும் நிகழ்வு நடந்தது. இன்னும் என்னென்ன நடக்குமோ!
பிளாஸ்டிக் ஒழிப்பு
20 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்துக் கொடுத்தால் ‘ஓர் உணவு’ என்ற திட்டத்தை மும்பையில் 27 வயதான சக்தி என்பவர் அறிவித்துள்ளார் இதன் மூலம் ஒரு வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கலாம் என்பது அவரது கருத்து!
