முதலமைச்சர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி காவல் துறையினர் நூதனப் பாதுகாப்பு ஏற்பாடு

1 Min Read

சென்னை, மே 7- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு புதிய ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ள விஜய், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் தலைமை செயலகத்திற்கு வர உள்ள நிலையில், அதையொட்டி, தலைமை செயலகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, விஜய்யை நேரில் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால், கூட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்தின் நுழைவாயில்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள இரும்புக் கம்பிகள், தடுப்புச்சுவர்கள் போன்ற இடங்களில் காவல் துறையினர் எண்ணெய் தடவியுள்ளனர். இதன் காரணமாக, ரசிகர்கள் அல்லது தொண்டர்கள் கம்பிகளை ஏறி உள்ளே நுழைவதைத் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பொதுவாக, விஜய்யின் நிகழ்வுகளில் சிலர் மரங்கள், கட்டடங்கள் அல்லது இரும்புக் கம்பிகள், போஸ்ட் கம்பங்களில் ஏறி பார்ப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் காவல் துறையினர் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *