வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு

திருச்சி,மே7 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை 7 நாட்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடை முறைகள் நேற்றுடன் முடிவுக்கு  வந்துள்ளன.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 171 பேர் போட் டி யிட்டனர். இதில் மணப் பாறை தொகுதியில் 18 பேர், சிறீரங்கத்தில் 21 பேர், திருச்சி மேற்கில் 14 பேர், திருச்சி கிழக்கில் 20 பேர், திருவெறும்பூரில்26பேர், லால்குடியில் 24 பேர், மண்ணச்சநல்லூரில் 22 பேர்,  முசிறியில் 11 பேர், துறையூரில் 5 பேர் அடங்குவர். இதில் 6 தொகுதியில் த.வெ.க.வும், தொகுதியில் தி.மு.க.வும், ஒரு தொகுதியில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. மாவட்டத் தில் 9 தொகுதிகளிலும் மொத் தம் 24 வேட்பாளர்கள் தவிர 147 பேர் தங்கள் வைப்பு தொகையை இழந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்ததை தொடர்ந்து தேர்தலில் போட் டியிட்ட வேட்பாளர்கள் விரைவாக தங்கள் தேர்தல் கணக்குகளை தேர்தல் நடத் தும் அதிகாரிகள் அலுவலகத் தில் ஒப்படைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி உள் ளது. இந்த வரையறைக்குள் வேட் பாளர் கள் செலவிட்டுள்ளனரா? என்பதை தணிக்கை செய்யும் வகையில் வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்த கணக்கையும் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருச்சிமாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய கட்சி வேட்பாளர்கள் உள்பட பெரும் பாலான வேட்பாளர்கள் அவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 7 நாட்களுக்குள்தங்கள் கணக்குகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்தசெலவு கணக்கையும், தேர்தல்பிரிவினர் பிரசாரத்தின் போது செய்த செலவுகணக்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வை யாளர் நேரில் வந்து கணக்கு களை சரிபார்த்து, கணக்கு சரிபார்க்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *