தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசுத் தேர்வுத்துறை விளக்கம்

1 Min Read

சென்னை, மே. 9-  அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா பிளஸ்-2 பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், துணை பொதுத் தேர்வு குறித்த தகவலை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 13ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். விடைத்தாள் நகல் பெற 15, 16-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கு வராதவர்கள், தோல்வி அடைந்தவர்கள் அடுத்ததாக துணை பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறும் வகையில், அதற்கான தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 29ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை வருகிற 18ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.

மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை இணைய வழி மூலம் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *