ஈரானின் பிடியில் உலகளாவிய பொருளாதாரம் சிக்கியுள்ளது: அமெரிக்கா

1 Min Read

வாசிங்டன் டி.சி., மே 6- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக் கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத் திற்காக பாகிஸ்தான் நாட் டில் வைத்து, 21 மணிநேரம் நீடித்த அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த நீட்டிப்புக்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவின் ஆயுத படைகளின் தலைமை தளபதி டேன் கெய்ன், அமெரிக்க போர் துறைக்கான அமைச்சர் பீட் ஹெக்சேத் உடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது அவர் ஈரானை கடுமையாக சாடினார். கடந்த 7 வாரங்களாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், வர்த்தக கப்பல்களை தாக்கியும், தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறினார். வர்த்தக போக்குவரத்து செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி, உலக பொருளாதார பாதிப்பை ஈரான் ஏற்படுத்தி வருகிறது என்றார்.

உலகளாவிய விநியோக சங்கிலியை ஈரான் ஆயுதம் போன்று பயன்படுத்தி வருகிறது. பணய கைதி போன்று, உலகளாவிய பொருளாதாரம் ஈரானின் பிடியில் சிக்கியுள்ளது என கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *