தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியைப் புறக்கணித்த மக்கள்!

1 Min Read

சென்னை, மே 5- தமிழ்நாட்டில் 2026 தேர்தலில், தி.மு.க. அதன் கூட்டணியும், பெருவாரியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

3ஆவது இடத்தில் அதிமுக கூட்டணியும் உள்ளது. திமுக மட்டும் தனித்து 60 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 45 இடங்களை கைப்பற்றி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்து 66 சட்டமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், தற்போது அதிமுக 45 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி சுமார் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், சென்னை, ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் படுதோல்வி அடைந்து உள்ளார். அவர், இந்தத் தேர்தலில் வைப்புத் தொகை (டெபாசிட்) இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 66 இடங்களை வைத்து பார்க்கும்போது, தற்போது தேர்தலில் 45 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த 10 தோல்வியுடன், இந்த தேர்தலையும் சேர்த்தால் 11ஆவது தேர்தல் தோல்வி ஆகும்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், ஆர்.காமராஜ், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பொள்ளாச்சி ஜெயராமன், கடம்பூர் ராஜு, மாதவரம் மூர்த்தி, பென்ஜமின் உள்ளிட்டவர்கள் தோல்வி அடைந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *