89ஆவது நினைவு நாள் இந்திய விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி வ.உ.சி! முதலமைச்சர் சமூக வலைத்தள பதிவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, நவ.19-செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் 89ஆவது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘திராவிட மாடல் அரசும் – வ.உசிதம்பரனாரும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கப்பலோட்டிய தமிழரின் 150ஆவது பிறந்தநாள் பெருவிழாவாக, கொண்டாடப்பட்டது. வ.உ.சி. பெயரில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உசி. சிலை திறப்பு மற்றும் அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது. கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறக்கப்பட்டது.

தம் உயிரையும், உணர்வையும் தமிழுக்காகவும், இந்திய விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தியாகத் திருவுருவான வ.உ.சி.யின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சி.யின் நினைவுநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *