மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்! – உதயநிதி ஸ்டாலின்

1 Min Read

சென்னை, மே 5- தேர்தல் முடிவு குறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர் களைச் சந்தித்தபோது, “இரண்டாம் முறையாகச் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் என்னைச் சட்டமன்ற உறுப்பின ராகத் தேர்வு செய்த என் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அதேபோல, இந்தக் கடும் போட்டியில் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நிச்சயம் இந்த முறையும் இந்தத் தொகுதி மக்களுக்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன். என்னால் முடிந்த அனைத்து நற்பணிகளையும் எங்கள் தலைவர் காட்டிய வழியில் தொடர்ந்து செய்வேன்.

தமிழ்நாட்டு மக்கள் இப்போது ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் அந்தத் தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இந்த நேரத்தில் வெற்றி பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவில் எங்கள் தலைவர் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் களை அழைத்து ஆலோசனை வழங்குவார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக் கைகள் அமையும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *