தங்கமணி குணசீலனுக்கு வீர வணக்கம்!

கொள்கை வீராங்கனை

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவராக இருந்து சிறப்பான வகையில் இயக்கப் பணிகளை ஆற்றியவரும், கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் முன் வரிசையில்  நின்றவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து சீரிய கழகப் பணியாற்றி, ‘மிசா’ கைதியாக ஓராண்டு சிறை வாசம் ஏற்ற வில்லிவாக்கம் குணசீலன் (மறைவு) அவர்களின் வாழ்விணை யருமான கொள்கை வீராங்கனை தங்கமணி (வயது 85) அவர்கள் நேற்று (3.5.2026) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

உடலால் மறைந்தாலும், இயக்கத் தொண்டால் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் சகோதரி தங்கமணி அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

அவர் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது மகன்கள், மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

4.5.2026    

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *