கருநாடக மாநிலம் ஹுப்ளியில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது பத்திரி கையாளர் ஒருவர்,”தேர்தல் முடிந்த உடனேயே எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதே. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் அவர் அதிர்ச்சி அடைந்து, சில வினாடிகள் பேசாமல் நின்றார். ஆனாலும் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைச் சர் ஷோபா,”மகளிருக்கு 33% ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இது 30 ஆண்டு களாக நிலுவையில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் மகளிருக்கு நீதி வழங்குவது குறித்து மீண்டும் மீண்டும் பேசி வரு கின்றன. ஆனால் உண்மையில் மகளி ருக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது” என கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பேசி, அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு
2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
புதுச்சேரி, மே 4 புதுச்சேரி அரசு ஊழியர் களுக்கு அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்தி 3.5.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி நிதித் துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவு:
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2026 முதல் அடிப்படை ஊதியத்தில் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் அடிப்படை ஊதியமானது, அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 7-ஆவது ஒன்றிய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பெறப்படும் ஊதியத்தைக் குறிக்கும். சிறப்பு ஊதியம் போன்ற எந்த வகை ஊதியத்தையும் உள்ளடக்காது.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 2 சதவீத அகவிலைப்படி உயர்வு புதுச்சேரியிலும் 1.1.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த உத்தரவு அனைத்து செயலகத் துறைகள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் அனைத்துத் துறைத் தலைவர்கள், அலுவலகத் தலைவர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கணக்குகள் மற்றும் கருவூலத் துறைக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
