ஆயிரம் அமித்ஷா எடப்பாடிகள் சேர்ந்தாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியைத் தடுக்க முடியாது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

1 Min Read

சென்னை, ஏப்.5 முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியைத் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்த பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அப்போது, அவரை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்தார். இன்று மீண்டும் அதே பாஜகவிடம் பழனிசாமி சரணடைந்துள்ளார். 2018-இல் தூத்துக்குடியில் 13 பேர் சுட் டுக் கொல்லப்பட்டபோது. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்’ என்றார்.
ரத்தக் கறை படிந்த அந்த வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஊழல் பற்றி பழனிசாமி பேசுவது, எவ்வகையில் பொருத்தமானது? தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் புகார்
பொள்ளாச்சி பாலியல் புகார் முதல் நிர்மலா தேவி விவகாரம் வரை அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை மூடி மறைக்க முடியாது. திமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை தேசியக் குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற பழனிசாமிக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க தகுதி இல்லை.திமுக அரசு அளித்த 505 வாக்குறுதிகளில் 405-அய் நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது. பொருளாதாரத்தில் மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டை 2-ஆம் இடத்துக்கு உயர்த்திய மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியை, ஆயிரம் அமித்ஷாக்கள். பழனிசாமிகள் சேர்ந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *