சாமியார்கள் ஜாக்கிரதை! கபட வேடதாரிகள் எச்சரிக்கை!

பெங்களூரு, மே 4- பெங்களூரு சென்னமரே அச்சுக்கட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஓர் இணையர்கள் வசித்து வருகின்றனர். இதில் கணவர் கடை வைத்து வியாபாரம் செய்து, குடும் பத்தை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரது வியாபாரத்தில் சரியான லாபம் கிடைக் காமல் இருந்துள்ளது.

இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் துன்பப்பட்டு வந்துள்ளனர். இதனை சரி செய்யவதற்காக மோகன்குமார் என்ற சாமியாரிடம் சென்று தீர்வு கேட்டுள்ளனர். இதற்கு சாமியார் மோகன்குமார். உங்களது குடும்பம் பெரும் சிக்கலில் உள்ளது என்றும், ‘கண் திருஷ்டி’ காரணமாக வியாபாரத்தில் இழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதற்கு பரிகாரமாக வீட்டில் வசிய பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வசிய பூஜையை செய்தால், குடும்ப பிரச்சினைகள், துன்பங்கள் தீர்ந்துவிடும் என்று நம்பிய இணையர்கள். சாமியார் சொன்ன பூஜையை தங்களது வீட்டில் நடத்த தயார் செய்தனர்.

இந்தநிலையில் பூஜைக்கு வந்த சாமியார். இதற்கு துணைவியார் மட்டும் வீட்டுக்குள் இருந்தால் போதும் என்று கூறி 2 மணி நேரத்துக்கும் மேலாக கணவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார். பின்னர் பூஜை செய்வதுபோல் நடித்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால், வேறு பூஜையின் மூலம் உங்களது குடும்பத்தை முழுவதும் அளித்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதில் பயந்த அந்த பெண் பாலியல் வன்கொடுமை குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட சாமியார் மீண்டும். அந்த பெண்ணை அழைத்துள்ளார். இதனை ஏற்க விரும்பாத பெண், நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த கணவர் உடனடியாக இதுகுறித்து சென்னமரே அச்சுக்கட்டு காவல் துறையில் சாமியார் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்தனர். இதுகுறித்து அறிந்த சாமியார் உடனடியாக தலைமறைவாகிவிட்டார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *