கேரளத்தில் 6ஆம் தேதி உணவகங்கள் மூடப்படும்! உரிமையாளர்கள் அறிவிப்பு!

1 Min Read

திருவனந்தபுரம், மே 3- வணிக எரிவாயு உருளை விலை ரூ.993 உயர்த்தப்பட்டது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன்மூலம் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்றும் வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வணிக எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6ஆம் தேதி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜு அப்சரா கூறியிருப்பதாவது:-

19 கிலோ வர்த்தக எரிவாயு உருளையின் விலை ரூ.3 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருப்பது உணவகம் மற்றும் கேட்டரிங் துறைக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. அதிகரித்து வரும் பல்வேறு செலவுகளால் தாங்கள் ஏற்கெனவே போராடி வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட எரிவாயு உருளை விலை உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *