டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
< ஏப்.29க்குப் பிறகு ஜாக்கிரதை – பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை.
< மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து. நீதிபதி பி.வி. நாகரத்னா கூறும்போது, “மதச்சார்பற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அரசு தலையிட முடியும். உதாரணத்துக்கு ஒரு கோயிலில் நடைபெறும் தேரோட்ட நிகழ்வுக்காக அனைத்து சாலைகளையும் மறித்து அடைத்து வைக்க முடியாது. சாலைகளை மறித்து அடைத்து வைப்பதற்கும், மதத்துக்கும் தொடர்பில்லை. அரசு தலையிட்டு முறைப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< கிராமப்புற நிர்வாகத்தில், சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, நீர், சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளை மய்யமாக கொண்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு குறியீடுகளில், தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன; வட மாநிலங்களை விஞ்சியுள்ளன – புதிய அறிக்கையின்படி. பீகார், மத்தியப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தரவரிசையில் கீழ் நிலையில் உள்ளன.
< பீகாரில் தேர்வு முறைகேடு: தேர்வு நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட எம்.பி.பி.எஸ். இரண்டாம் பருவத் தேர்வுகளை இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் (IGIMS) ரத்து செய்தது.
< ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி; சமூக நீதிக்கு அது அவசியம் என்கிறார்.நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒரே பள்ளியில் இணைந்து பயிலும் நிலை உருவாகும் வரை, இடஒதுக்கீட்டை யாராலும் நீக்க முடியாது என்று உமா பாரதி கூறினார்.
தி இந்து:
< மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
< மழலையர் வகுப்பில் நலிவடைந்த பிரிவு மாணவர் சேர்க்கை ஒரு “தேசிய இயக்கமாக” இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், “அருகாமைப் பள்ளிகள்” மாநில அரசால் ஒதுக்கப்படும் மாணவர்களை எந்தத் தாமதமும் இன்றி சேர்க்க அரசியலமைப்புச் சட்ட ரீதியாகவும் சட்டப்படியும் கடமைப்பட்டுள்ளன என்று தீர்ப்பளித்தது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
< ’பாஜகவின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன’: டில்லி எதிர்க்கட்சித் தலைவரும், ஆம் ஆத்மி சட்டமன்ற உருப்பினருமான அதிஷி கண்டனம். ஏழு ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களை பாஜகவில் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்த மாநிலங்களவை செயலகத்தின் அறிவிப்பை, “சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோத மானது”. கட்சித் தாவல் தடைச் சட்டங்களின் கீழ், மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமுன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு எந்த விதியும் இல்லை என குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா

