கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.4.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மதுபான கொள்கை ஊழல் வழக்கு விவகாரம்; டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்: நீதிமன்றத்தை புறக்கணித்து கெஜ்ரிவால் கடிதம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று நான்காவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி தொடரும், மம்தா நம்பிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*131ஆவது சட்டத் திருத்த மசோதா பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியதல்ல; அது கூட்டாட்சி ஒப்பந்தத்தையே தகர்க்கும் நோக்கம் கொண்டது, காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கட்டுரை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* டில்லி பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை நிர்பந் தத்தால் நெருக்கடி. புதிய கல்விக் கொள்கையின் (NEP) மொழி சார்ந்த வலியுறுத்தல்கள், டில்லி வகுப் பறைகளில் அயல் மொழிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றன என கல்வியாளர்கள் கவலை.

தி இந்து:

* தமிழ்நாட்டின் இரட்டை இலக்க வளர்ச்சி: தமிழ்நாடு மாநிலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க அளவிலான உண்மையான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025-2026 நிதியாண் டில், மாநிலம் 10.83% என்ற வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. தேசிய சராசரி வளர்ச்சி 7.4% விகிதம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *