புனே, ஏப்.28 மகாராட்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் ரயில்வே வட்டாரத்திலும் பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையிலிருந்து சோலாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், நேற்று (27.4.2026) புனே ரயில் நிலை யத்தை வந்தடைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், ரயில்வே தொழில்நுட்பப் பணி யாளர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தடம் புரண்ட பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி, சரி செய்யும் பணியில் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடு பட்டு வந்தனர். இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு, இந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும். புனே ரயில் நிலையத்தில் மிக வும் மெதுவாக சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது, இதுவே மிகவேகமாக செல்லும் போது நடந்திருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் ரயில்வே அதிகாரிகள் இந்த தடம் புரண்ட காரணி குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
