டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 152 தொகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என மம்தா நம்பிக்கை.
தி இந்து:
*ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நாடோடிப் பழங்குடியினர் (DNT) கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களில் தங்களுக்கு என ஒரு தனிப் பத்தியையோ அல்லது கேள்வியையோ சேர்க்குமாறு நாடோடிப் பழங்குடியினர் (DNT) தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தி டெலிகிராப்:
* ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு எம்.பி.க்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு மாநிலங்களவைத் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது.
– குடந்தை கருணா

