அமெரிக்கா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச் சூடு-9 பேர் படுகாயம்

1 Min Read

வாஷிங்டன், ஏப். 27- அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் புளுமிங்டன் நகரில் இண்டியானா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகே நேற்று அதிகாலை சைக்கிள் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் பல்கலைக்கழகம் முன் திரண்டிருந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்தவர்களை குறிவைத்து திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ஆனாலும், இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்?, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *