ரயில்வேயில் 29,600 பணியிடங்களை குறைக்க முடிவு தென் மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

2 Min Read

சென்னை, ஏப்.27 இந்திய ரயில்வே யில் சுமார் 29,608 பணியிடங்களைக் குறைக்கும் ஒன்றிய அரசின் முடிவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாகத் தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பாதிக்கப்படுவது தென் மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர்கள் சாடியுள்ளனர்.

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொத்தம் 14.8 லட்சம் பணியாளர்களைக் கொண்ட ரயில்வேயில், 2 சதவீத பணியிடங்களைக் குறைக்கும் நட வடிக்கை வேதனையானது. வந்தே பாரத், அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்கள் அறிமுகமாகும் நிலையில், பணியாளர்களைக் குறைப்பது ரயில்வே சேவையின் தரத்தையும், பயணிகளின் பாதுகாப்பையும் கேள் விக்குறியாக்கும். இது தென் மாநில மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி. இது ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உரு வாக்குவோம் என வாக்குறுதி அளித்த பாஜ அரசு, தற்போது உள்ள வேலைகளையும் ஒழித்துக் கட்டுகிறது. தினசரி 22 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் சூழலில், புதிய பணியிடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக ஆட்குறைப்பு செய்வது விபத்துகளைத் தடுக்க உதவாது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற் றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா
(ம.ம.க. தலைவர்)

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத் துள்ள கண்டனத்தில் கூறியதாவது:

தெற்கு ரயில்வே பணியிடங்களும், அய்சிஎப் நிறுவனத்தில் பணியிடங் களும் குறைக்கப்பட இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட் குறைப்பு நடவடிக்கையால் தற்போது பணியில் இருப்பவர்களுக்குப் பணிச் சுமை அதிகரிப்பதோடு, ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் தேக்கம் ஏற்படும்.

ஏழை எளிய மக்களின் போக் குவரத்து சாதனமான ரயில்வேயைப் பலவீனப்படுத்தும் செயல்களைத் தவிர்த்து, கூடுதல் பணியாளர்களை நியமிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

ரயில்வேயில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆட்குறைப்பு நட வடிக்கை தொழிலாளர் விரோதப் போக்கு என்றும், இது தெற்கு ரயில்வேயின் செயல்பாட்டைப் பெருமளவில் பாதிக் கும் என்றும் தலைவர்கள் ஒருமித்த குரலில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *