காரைக்குடி மாவட்ட மேனாள் ப.க. செயலாளர் ச.கைவல்யம் மறைந்தார்

காரைக்குடி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.கைவல்யம் (வயது 84) புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26.4.2026) காலை 10.40 மணியளவில் இயற்கை எய்தினார்.

அவரது வாழ்விணையர் கலாவதி மாவட்ட மகளிரணி அமைப்பாளராகப் பணியாற்றியவர். கை.அறிவழகன், கை.அன்பழகன் என்ற இரண்டு மகன்களும், கை.மைவிழி என்ற மகளும் உள்ளனர்.  மறைந்த கைவல்யம் அவர்களது உடல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாளை காலை 8 மணிக்கு அரசு மரியாதையுடன் உடற் கொடையாக வழங்கப்பட உள்ளது.

மறைந்த கைவல்யம் அவர்கள் சீரிய பகுத்தறிவாளர். தனது குடும்பத்தினர் அனைவரையும் தன் கொள்கை வழி நின்று உருவாக்கியவர். அரசுப்பணியில் இருந்த போதும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் என பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார்.  மறைவதற்கு முன்பு, குடும்பத்தினர் அனைவரிடமும் கொள்கைப்பூர்வமாக தனது உறுதியைத் தெரிவித்து விட்டு மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *