ஜனநாயகக் கடமையை தவறவிட்ட அரசு ஊழியர்கள் : சென்னையில் 19,600 அஞ்சல் வாக்குகள் பதிவாகவில்லை!

1 Min Read

சென்னை, ஏப்.26  சென்னையில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என சுமார் 19,600 பேர் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தவில்லை என்ற அதிர்ச்சி அஞ்சல் வெளியாகியுள்ளது. இது மொத்த அஞ்சல் வாக்குகளில் சுமார் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 52,047 பேர் அஞ்சல் வாக்கு (Postal Ballot) கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு முறைப்படி அஞ்சல் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இறுதி நிலவரப்படி 32,447 பேர் மட்டுமே தங்களது வாக்குகளைச் சரியாகப் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 19,600 பேர் தங்களுக்குக் கிடைத்த ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவறிவிட்டனர். இந்தக் குறைவான வாக்குப்பதிவிற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன:

விழிப்புணர்வு இன்மை: அஞ்சல் வாக்குகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறித்த சரியான புரிதல் இல்லாதது.

படிவம் பெறுவதில் தாமதம்: படிவம் 12 மற்றும் 12A பெறுவதில் ஏற்பட்ட நிர்வாக ரீதியான காலதாமதம்.

பணிச்சுமை: தேர்தல் பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் வாக்கு செலுத்துவதற்கான நேரமின்மை. அஞ்சல் வாக்குச் சேகரிப்புப் பணிகள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அன்று முதலில் அஞ்சல் வாக்குகளே எண்ணப்படும் என்பது விதியாகும். அரசுப் பணியாளர்களே பெருமளவில் வாக்கு செலுத்தாதது தேர்தல் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *