திருநங்கைகளும் சமூகத்தில் உரிமையுடன் வாழ தகுதியுள்ளவர்கள் தாலுகா அளவில் மறுவாழ்வு திட்டம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 Min Read

மதுரை, ஏப்.26 திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டு மெனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான காணொலிப் பதிவை பகிர்ந்ததற்காகத் தன் மீது பதியப்பட்ட வழக்கில் முன்பிணை  கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், மனுதாரருக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

விசாரணையின் போது திருநங்கை களின் நிலை குறித்து நீதிபதி தனது கவலையை வெளிப்படுத்தினார்:

திருநங்கை ஒருவர் தீக்குளித்து உயி ரிழந்த சம்பவம் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. திருநங்கைகளும் நம்மைப் போன்றவர்கள்தான் அவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

சமூகம் அவர்களைப் புறக்கணித்து வறுமைக்குத் தள்ளுவது ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வியாகும். அவர்களின் மரியாதை மற்றும் மாண்பு கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு திருநங்கைகளுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் உருவாக்க வேண்டும்.

வாழ்வாதாரம்:  சுயதொழில் வாய்ப்புகள், நிலையான வாழ்வாதாரம் மற்றும் திருநங்கைகளின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட நலத்திட்டங்களை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பான செயல்பாட்டு அறிக்கையை ஜூலை 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *