புதுடில்லி, ஏப்.26 இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் இந்திய ரயில்வேயில், “மனித வள மறுசீரமைப்பு” என்ற பெயரில் சுமார் 29,608 ஊழியர் களைப் பணிநீக்கம் செய்ய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தொடர் பான அதிகாரப்பூர்வ கொள்கை ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள “மனித வள மறுசீரமைப்பு இலக்கு 2026-2027” என்ற கொள்கை முடிவின்படி, அடுத்த நிதியாண்டிற்குள் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தற்போது 14,80,455 நிரந்தரப் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேயின் நிலை:
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள 12 மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக: தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில் உள்ள 95,322 ஊழியர்களில் 1,906 பேர் குறைக்கப்பட உள்ளனர். கிழக்கு ரயில்வே: 1.27 லட்சம் பணியாளர்களில் 2,544 பேர் குறைக்கப்பட உள்ளனர்.
காலியாக உள்ள இடங்களை நிரப்பா மல் விடுவது அல்லது விருப்ப ஓய்வு (VRS) மூலமாக இந்த இலக்கை எட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ரயில்வே வாரியம் இந்த முடிவிற்குப் பின்வரும் காரணங்களை முன்வைக்கிறது: தொழில்நுட்ப வளர்ச்சி: வந்தே பாரத் போன்ற அதிநவீன ரயில்கள் மற்றும் தானியங்கி சிக்னல் முறைகளால் மனித உழைப்பின் தேவை குறைந்துள்ளது.
98 சதவீதப் பாதைகள் மின்மயமாக்கப் பட்டு விட்டதால், பழைய பராமரிப்பு முறைகள் தேவையற்றதாகக் கருதப்படுகிறது.
ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு களைக் குறைத்து, அந்த நிதியை உள்கட் டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்த நிர்வாகம் விரும்புகிறது.
ஏற்ெகனவே ரயில்வேயில் லட்சக் கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், தற்போது இருக்கும் ஊழியர்களையும் குறைப்பது ரயில் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. மேலும், ரயில்வே வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் இதனால் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெ டுக்க ரயில்வே ஊழியர் சங்கங்கள் ஆலோசித்து வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
