சென்னை, ஏப்.26 தமிழ்நாட் டில் வரும் 2026-2027ஆம் கல்வியாண் டிற்கான பாடநூல்கள் அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அச்சுப்பணிகள்
நடப்பு கல்வியாண்டிற்காக மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது 88 சதவீத பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மொத்தம் உள்ள புத்தகங்களில் 2.71 கோடி பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், மீதமுள்ள 1.4 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகள் மற்றும் பொது விற்பனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட கிடங்குகளுக்கு மாற்றம்: 1, 2, 3-ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டு, அந்தந்த மாவட்டக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், அவற்றின் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இப்புத்தகங்களும் விரைவில் அச்சிடப்பட்டு பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தக விற்பனை கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் புத்தகங்கள் தேவைப்படுவோர் பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்:
நுங்கம்பாக்கம் டிபிஅய் (DPI) வளாகம். அண்ணா நூற்றாண்டு நூல கம். அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு.
தமிழ்நாட்டில் உள்ள 44 ஆயிரத் திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவர்களுக்கு (1-12 வகுப்பு வரை) எவ்வித தாமதமும் இன்றி புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
