சென்னை, ஏப். 30- சென்னையின் 51 கி.மீ நீளக் கடற்கரைப் பகுதியை மேம்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட ‘சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்து யிரூட்டும் திட்டம்’ அதி காரப்பூர்வமாகக் கை விடப்பட்டுள்ளது.
சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, கட லோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி வழங்கத் தமிழ்நாடு கட லோர மண்டல மேலாண்மை வாரியம் மறுத்துவிட்டது. மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்ச கத்தின் முறையான அனுமதி இன்றி இத்திட்டத்தைத் தொடரக் கூடாது எனத் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இடைக் காலத் தடை விதித்திருந்தது. சில பகுதிகள் ‘புளூ பிளாக்’ தரத்திற்கு மாற்றப் பட வேண்டும் என அறி வுறுத்தப்பட்ட போதிலும், கடந்த இரண்டு ஆண்டு களாக எவ்வித திருத்தப் பட்ட திட்ட அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இத்திட்டத்தினால் வாழ் வாதாரம் பாதிக்கப்படும் என எண்ணூர் முதல் கோ வளம் வரையிலான 65 மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். கடற்கரையில் சுற்று லாப் பயணிகளுக்கான நடை பாதைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மய்யங்கள் அமைக்கப் பட்டால், படகுகளை நிறுத்த வும் வலைகளை உலர்த் தவும் இடம் கிடைக்காது என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
முதலில் மெரினா முதல் கோவளம் வரை 31 கி.மீ தூரத்திற்குத் திட்டமிடப் பட்டு, பின்னர் 51 கி.மீ ஆக விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம், சென்னையின் கடற்கரையை அய்ந்து மண்ட லங்களாகப் பிரித்துப் பொழுதுபோக்கு, கலை மற்றும் கலாச்சாரம், நீர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்த இலக்கு நிர்ண யித்திருந்தது. தற்போது இத்திட்டம் கைவிடப்பட்ட தன் மூலம் தங்கள் வாழ்வா தாரம் காக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
சென்னை கடற்கரை மறுசீரமைப்புத் திட்டத்திற்கு கடலோர மேலாண்மை வாரியம் அனுமதி மறுப்பு
Leave a Comment

