சாம் சால்வடார், ஏப். 26– மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், எம்.எஸ்.-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது.
டெகோலுகாவில் அமைந்துள்ள கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட சிறைச்சாலை யில், கை, கால் சங்கிலியி டப்பட்ட நிலையில் கைதிகள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் 486 பேர் மீதான வழக்கு விசா ரணை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. கடந்த 2012 முதல் 2022 வரை நடைபெற்றதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலை, ஆயுத கடத் தல் உள்ளிட்ட பல குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு நிலவும் கும்பல் வன்முறையை, கட்டுப்படுத்தும் நடவடிக் கையாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
