தமிழ்நாடு வாக்களித்துவிட்டது: மே 4 தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் – ஒன்றாக!! தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

1 Min Read

சென்னை, ஏப்.24  தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் – ஒன்றாக! என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.4.2026) தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்விவரம் வருமாறு:

பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!

பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி எப்போதும் போல அமைதியான முறை யில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.

84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாது காத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றி யுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே (23.4.2026) மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்க ளுக்குச் செல்கின்றனர்.

குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!

‘‘ஒரு வாக்குதானே’’ என எண்ணாமல், ‘‘ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது’’ என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,

மே 4 தமிழ்நாடு வெல்லும்!

வெல்வோம் – ஒன்றாக! என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *