கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.4.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தொகுதி மறுவரையறை என்ற கருப்புச் சட்டம்: சட்ட நகலை எரித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “மகளிர் இடஒதுக்கீடு போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது” – கார்கே

* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவையும், தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து வெளியிடுவது ஒரு சதிவேலை, மம்தா குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சி அமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்;

* பாஜக ‘நாரியை’ (பெண்ணை) வெறும் ‘நாராவாக’ (முழக்கமாக) மாற்றிவிட்டது; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) பெண்களின் உரிமைகளை பறிக்க முயல்கிறது: பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடிய அகிலேஷ்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எல்லை மறுவரையறை நடவடிக்கையில் ஒடிசா நான்காவது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும்: நவீன் பட்நாயக். ஒடிசாவின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்று எச்சரித்த பிஜு ஜனதா தளம் (BJD) தலைவர், மாநிலத்தின் அரசியல் உரிமைகள் நீர்த்துப்போக செய்யப்படுவதை எதிர்த்து போராட, ஒடிசா முதலமைச்சர் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தி இந்து:

*ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு அச்சு விளம்பரங்களுக்காக மோடி அரசின் கலாச்சார அமைச்சகம் ரூ.76 லட்சம் செலவிட்டது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரகசியம் அம்பலம்.

* ‘பழைய தரவுகளுடன் தொகுதி மறுவரையறை செய்வது தேர்தல் கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடும்’, உச்ச நீதிமன்றம் 2025இல் எச்சரித்தது.தொகுதி மறுவரையறை தன்னிச்சையானது எனக் கண்டறியப்பட்டால், நீதி மன்றம் தலையிட முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *