டில்லியின் காலடியில் வைப்பது தான் சுயமரியாதையோ!

2 Min Read

22.4.2026 அன்றைய
‘துக்ளக்’ இதழுக்கானப் பதிலடிகள்

கேள்வி:  தமிழ்நாட்டை யார் ஆண்டால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: யார் ஆண்டாலும் பரவாயில்லை. தி.மு.க. ஆளக் கூடாது என்பதே துக்ளக்கின் நீண்டநாள் கொள்கை.

பதிலடி: ‘துக்ளக்’ வகையறாக்கள் யாரைத் தோற்கடிக்க விரும்புகிறார்களோ, அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் – என்பது தமிழ்நாட்டு மக்களின் எளிதான சூத்திரம்!

– – – – –

கேள்வி:  ஒரு வாக்காளர், எதை அடிப்படையாக வைத்து ஓட்டுப் போட வேண்டும்?

பதில்: தேசம், தெய்வம், தர்மம் – மூன்றுக்கும் உகந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்.

பதிலடி:  அந்தோ பரிதாபம்! பணம், பதவி, அதிகாரம், ஆணவம் கொண்ட ஒரே கட்சியான பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறதோ ‘துக்ளக்’.

– – – – –

கேள்வி:   ‘அண்ணா அறிவாலயம் சுயமரியாதைக் கோட்டை’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டிப் பேசி உள்ளாரே?

பதில்: அதனால்தான் கூட்டணிக் கட்சிகள், தன்மானத்தின் கோட்டையான அந்த அறிவாலயத்தில் தங்கள் சுயமரியாதையை இழக்கிறார்கள்.

பதிலடி: ஆமாம். தமிழ்நாட்டு அரசியலை டில்லியின் காலடியில் வைப்பவர்கள் தான் ‘துக்ளக்’ பார்வையில் ‘சுயமரியாதை’ச் (அ) சிங்கங்கள்!

– – – – –

கேள்வி:  ஸ்டாலினுக்கு மோடி மீது வெறுப்பா, பா.ஜ.க. மீது வெறுப்பா?

பதில்: முஸ்லிம், கிறிஸ்தவர்களின் வாக்குகள்தான் மோடியை ஸ்டாலின் வெறுப்பதற்குக் காரணம். அவர்கள் மோடியை ஏற்றுக்கொண்டு விட்டால். ஸ்டாலினுடைய மோடி வெறுப்பு காணாமல் போய்விடும்.

தமிழ்நாடு, பதிலடிப் பக்கம்

பதிலடி: நிதின் கட்கரிக்கு மோடி மீது வெறுப்பா – பி.ஜே.பி.யின் மீது வெறுப்பா என்று கேட்பது போலிருக்கிறது. ஓர் உண்மையைத் ‘துக்ளக்’ ஒப்புக் கொண்டு விட்டது! பி.ஜே.பி. என்பது சிறுபான்மை மக்களின் எதிர்ப்பில் குளிர் காய்கிறது என்பதுதான் அந்த உண்மை! முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தனிப்பட்ட மனிதர் மீதும் வெறுப்புக் கிடையாது.

– – – – –

கேள்வி:  ஜாதி, மொழி, மதம், இனம், மாநிலம் என்று பார்க்காமல், குணம், நேர்மை, ஒழுக்கம், சத்தியம், அஹிம்சை இவற்றை அளவு கோலாக வைத்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் காலம் மீண்டும் வர வாய்ப்புள்ளதா?

பதில்: 1,000 ஆண்%

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண