10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ!

2 Min Read

புதுடில்லி, ஏப்.14- சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10ஆம் வகுப்பு படித்து 2027ஆம் ஆண்டில் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான தேர்ச்சி விதியை நிர்வாகம் கடுமையாக்கியிருக்கிறது.

அதன்படி, ‘எழுத்துத் தேர்வு’ மற்றும் ‘வகுப்பு உள்மதிப்பீடு’ என இரண்டு முறையிலும் மாணவர்கள் 33 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே 10ஆம் வகுப்பில் தேர்ச்சி என்று அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தற்போது, மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 80 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 26.5 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டில் 20க்கு 6.6 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த விதி 2027ஆம் ஆண்டுமுதல் மாற்றப்படுகிறது.

அதாவது, 2026ஆம் ஆண்டில் பொதுத் தேர்வெழுதியிருக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் ஒட்டுமொத்தமாக 33 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற வேண்டும். 80 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் பள்ளிகளால் நடத்தப்படும் 20 மதிப்பெண்களுக்கான அகமதிப்பீடு தேர்வு என இரண்டு மதிப்பெண்களில் ஒன்றில் தகுதி மதிப்பெண் குறைந்தாலும், மற்றொன்றில் நல்ல மதிப்பெண் எடுக்கும்போது, அந்தப் பாடத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி உறுதி செய்யப்படும். சில பாடங்களில், பொதுத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டின் விகிதம் 70:30 ஆகவும் இருக்கும்.

சிபிஎஸ்இ கடந்த வாரம் 2026-2027 கல்வியாண்டிற்கான இடை நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தை அறிவித்தது. அதில், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டில் உள்ள மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி யிருந்தன.

அதில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் அக மதிப்பீடு என்பது பள்ளிகளால் நடத்தப்படும் பருவக்காலத் தேர்வுகள், பிராஜெக்ட்டுகள், பாடம் குறித்த ரெக்கார்டு பணிகளில் அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் ஆசிரியர்களால் வழங்கப்படும்.

எனவே, ஒரு பாடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட, ஒரு மாணவர், பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி, அக மதிப்பீடு மற்றும் பொதுத் தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத் தொகையிலும், தனித்தனியாகவும் குறைந்தபட்சம் 33 சதவிகித மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

முழுமையாக அக மதிப்பீட்டின் மூலம் மதிப்பிடப்படும் பாடங்கள், அவற்றுக்கான வழிகாட்டலின்படி நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, அக மதிப்பீட்டு முறையில் 20க்கு மாணவர்கள் பெரும்பாலும் 15 மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். எனவே, படிக்க இயலாத மாணவர்கள் கூட, 80 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் பொதுத் தேர்வில் 18 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி, அவ்வாறு செயல்பட முடியாது.

எழுத்துத் தேர்விலும் 33 சதவிகித மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால், படிக்க இயலாத மாணவர்கள் சிரமப்பட்டு படிக்க வேண்டும். தோல்வி யடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக் கலாம் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *