70 வயது மதிக்கத்தக்க
ஒரு பெண்ணின் நெகிழ்ச்சி!
திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையின்போது, கழகத் தலைவரை நெருங்கி, அவருக்கு முண்டியடித்துக் கொண்டு பெண்கள் வணக்கம் செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தபோது, 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ‘‘அய்யா நான் உங்களை என்னுடைய 10 வயதில் பார்த்தது. இப்பதான் மறுபடியும் பார்க்கிறேன். நீங்க நல்லா… இருக்கணும் அய்யா…’’ என்று, காற்றில் கழகத் தலைவரின் முகத்தை வழித்து, நெட்டி முறித்தார். கழகத் தலைவர் உள்பட, கூடி நின்றவர்கள் நெகிழ்ந்து போயினர். திராவிடர் இயக்கக் குடும்பத்தின் முதிர்ந்த தலைவர் ஒருவருடன் தாங்கள் செலவழித்த அந்த குறுகிய நேரத்தை பெருமிதமாகக் கருதி மகிழ்ந்தனர் திண்டுக்கல் மக்கள்.

