புதுடில்லி, ஏப்.6 காந்தியாரை கொலை செய்வதற்கு முன் சுபாஷ்சந்திர போஸை ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்து அவரையும், அவரது அய்.என்.ஏ. படையினரையும் அழித்தது ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னர் காந்தியாரை கொலை செய்தது. பின்னர் கல்விக்கு முன்னிலை கொடுத்தார் என்பதற்காக டில்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டிற்கு தீ வைத்தது. ஆர்.எஸ்.எஸ். கொலை முயற்சியில் தப்பித்த ஒரே தலைவர் காமராசர் மட்டுமே. கல்வி உரிமையை நிலைநாட்டிய காமராசரின் தமிழ்நாட்டில் பேரூர் ஆதீனத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சிறப்பிக்கப்படுகிறார், அதிமுகவின் எஸ்.பி வேலுமணி அடிமை சாசனம் தருகிறார். கொங்கு மண்டலத்தில் பல தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சி நடக்கிறது.
இந்த ஆர்.எஸ்.எஸ். பற்றி அன்றே காமராசர் எச்சரித்தார். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடக்கும் பள்ளிக்கூடங்களை அடையாளப் படுத்தி புறக்கணிக்கச் செய்வோம்.
– ஒன் இண்டியா

