சீன கண்காணிப்பு படக்கருவிமூலம் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, ஏப்.6 ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள் இந்தியாவைக் கண்காணிப்பதை மறைப்பதாகவும், இதனால் குடிமக்களின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (4.4.2026) குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகளுக்கு அண்மையில் தடை விதித்த போதிலும், நடை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட வில்லை என ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசு கட்டடங்கள்: தடையையும் மீறி பல அரசு அலுவலகங்களில் இப்போதும் சீன தயாரிப்பு படக் கருவிகளே பயன்பாட்டில் உள்ளன.

தரவுத் திருட்டு: இக்கருவிகள் மூலம் நாட்டின் முக்கியத் தரவுகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் அபாயம் உள்ளது.

மறைமுகமாக இயங்கும் செயலிகள்

தடை செய்யப்பட்ட சீன செயலிகள், புதிய பெயர்களில் மீண்டும் இந்தியச் சந்தையில் உலா வருவதாக அவர் கவலை தெரி வித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்ப அடிப்படையிலான செயலிகள் மக்களின் தரவுகளைக் கையாள்வது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒன்றிய அரசு தனது தவறுகளை மறைக்க முயற்சிக்கிறது. கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் செயலிகள் வாயிலாக நடக்கும் அந்நிய நாடு களின் ஊடுருவலை மூடி மறைப் பதன் மூலம் குடிமக்களின் பாது காப்பை அரசு பணயம் வைக்கிறது.” – ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் மழுப்பலான பதில்

இது தொடர்பாக நாடாளுமன்றத் தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் முன்வைத்த முக்கிய கேள்விகள்:    நாட்டில் பயன்பாட்டில் உள்ள படக்கருவிகளில் எத்தனை பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றவை? எந்தெந்த வெளிநாட்டு ஏஅய் (AI) தளங்கள் அரசுத் தரவுகளைக் கையாளுகின்றன?

தடை செய்யப்பட்ட செயலிகள் எத்தனை மாற்றுப் பெயர்களில் மீண்டும் இயங்குகின்றன?

இந்தக் கேள்விகளுக்குப் பதி லளிக்காமல் அமைச்சர் “வார்த்தை ஜாலங்களால்” உண்மையை மறைக்கப் பார்க்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஒப்புக்கொண்ட அபாயம்

அரசு அலுவலகங்களில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான சீன படக்கருவிகள் தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு அச் சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதை ஒன்றிய அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள படக்கருவி பாதுகாப்பானவையா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை எதையும் அரசு வெளியிடவில்லை என ராகுல் காந்தி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *