கருநாடக மாநிலத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 இல் ‘போதிவிருட்சம் விருது’

2 Min Read

பெங்களூரு, ஏப்.22 கருநாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் ஸ்பூர்த்தி தாமா அமைப்பு, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வரும் ஏப்ரல் 14 அன்று பெங்களூருவில் நடைபெறும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘போதிவிருட்சம் விருது’ (போதி மரம் விருது) வழங்கப்படு வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் பிரபல சிந்தனை யாளரும், போராளியுமான டாக்டர்
கி.வீரமணி அவர்களுக்கு ‘அம்பேத்கர் ஹப்பா – 2026′ முன்னிட்டு ஸ்பூர்த்தி தாமா சார்பில் வழங்கப்படும் ‘போதிவிருட்சம்  விருது’ வழங்கப்பட உள்ளது.

டாக்டர் கி.வீரமணி அவர்கள் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் கொள்கைகளுக்கு சட்ட ரீதியான வலிமையை வழங்கிய அபூர்வ மேதை. 10 வயதுச் சிறுவராக இருந்தபோதே பெரியார் அவர்களின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, இயக்கத்தில் இணைந்தவர். எம்.ஏ. மற்றும் சட்டப் படிப்பை முடித்துள்ள கி.வீரமணி அவர்கள், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், இப்போது அதன் தலைவராகவும் இருந்து, சமூக நீதியைப் பாதுகாப்பதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அம்பேத்கர் ஜெயந்தியை ‘அம்பேத்கர் ஹப்பா’வாக கொண்டாடி வரும் ஸ்பூர்த்தி தாமா, ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகவும், எழுச்சிக்காகவும் பாடுபட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் ‘போதிவிருட்சம்’ (போதி மரம்) பெயரில் ஒரு தேசிய விருதையும், ‘போதிவர்தன’ என்ற பெயரில் அய்ந்து மாநில விருதுகளையும் வழங்கி வருகிறது.

‘போதிவிருட்சம் ’ விருதுடன் ஒரு பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் வழங்கப்படும்.  ‘போதிவர்தன’ விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் விருதுத் தொகையும் வழங்கப்படும்.

இந்த விருதுகள் ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ள ‘அம்பேத்கர் ஹப்பா’ நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு மூத்த இலக்கியவாதி நாடோஜ கும். வீரபத்ரப்பா அவர்களால் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் அசோக், ஸ்பூர்த்தி தாமாவின் தலைவர் எஸ்.மரி சுவாமி ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *