கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.4.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* “அதிமுகவை விலைக்கு வாங்கி இருக்கிறது பாஜக” தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற என்டிஏ கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்: திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த காரை, தேர்தல் பறக்கும் படை சோதனை. முழு ஒத்துழைப்பு தந்தார் முதல்வர்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த நூறு பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக மிர்சா மாளிகையில் வசிக்கும் நவாப் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ரூபாய் மதிப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது; 2026 நிதியாண்டில் 9.55% மதிப்பை இழந்து 94.83இல் நிலைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாகவும் மாறியுள்ளது.

* ‘கோயம்புத்தூர் மாவட்டத்தில் முழுமையான வெற்றியைப் பெற திமுக பாடுபடும்’: முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி. இந்நிலையில், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சி அமைத்ததும் தமிழகம் முழுவதும் உள்ள 20 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து:

* பெண்களுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த தொகுதி மறுவரையறைக்கு அரசு திட்டமிடுவதால், ‘பிராந்திய ஏற்றத்தாழ்வு’ குறித்து காங்கிரஸ் விமர்சனம். தென் மாநிலங்கள் 66 இடங்களை (129-195) பெறுகின்றன; அதேவேளையில் வட மாநிலங்கள் 200 இடங்களைப் பெறுகின்றன,” என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘ரூபாய்க்கும் பாஜகவின் பிம்பத்திற்கும் இடையே கடும் வீழ்ச்சி போட்டி’: கீழ்நோக்கி வீழும் இந்தப் போட்டியில், ரூபாய்க்கும் பாஜகவின் பிம்பத்திற்கும் இடையே ஒரு கடும் போட்டி நடைபெற்று வருகிறது,” என்று அகிலேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *