தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

6 Min Read

சென்னை, மார்ச் 30– தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

மயிலாப்பூர் – தென் சென்னை

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மயிலாப்பூர் அம்பேத் கர் பாலம் அருகில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரியின் 77 ஆவது நினைவு நாள் மற்றும் ‘ஏன் திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டும்?’ என்ற தலைப்பில் மாபெரும் பரப்பரை பொதுக்கூட்டம்  28.03.2026 மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் தலைமை யேற்றார்.  தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற் புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார்.

கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்), ச. மகேந்திரன் (இளைஞர் அணி துணைத் தலைவர்) ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வீ.கே.ஆர். பெரியர் செல்வி, முருகன் (விசிக), பி.சாரநாத் (விசிக), எஸ்.கே.சிவா (சி.பி.அய்), எஸ்.குமார் (சி.பி.அய்.எம்) ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு அவர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் வருகை தந்து வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாற்றினார்.

அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

கழக பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து பாராட்டினார். பிறகு தோழமைக் கட்சி தோழர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினர்.

எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர்,திமுக), அ.தவநேசன் (திமுக, 125ஆவது வட்டச் செயலாளர்), அ.ரேவதி (125ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கழகத் தோழர்களான அ.அன்பு (துணைத் தலைவர், மாவட்ட இளைஞரணி), வி. வளர்மதி (தலைவர், மகளிர் அணி), பி. அஜந்தா, வி. தங்கமணி, ஜெ. சொப்பன சுந்தரி, வி. சகானப் பிரியா, ஆர். கோமதி, வி.நிலா, கு.ரேவதி, ச. மாரியப்பன், அ.அன்பு, திருவல்லிக்கேணி அப்துல்லா, ஈ. குமார், எம்.டி.சி. இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க. தமிழ்ச்செல்வன் (துணைச் செயலாளர் ஆவடி மாவட்டம்), குன்றத்தூர் மு. திருமலை, சி.காமராஜ்,

கரு. அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர், மேற்கு சென்னை) க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், மேற்கு சென்னை), ம.தி. பெரியார் ஆதவன், ம.தி. பெரியார் இனியன், தர்மா ஆகியோரும்;

திராவிடர் கழகம்

தோழமைக் கட்சியினரான எஸ். வெங்கடேசன் (124ஆவது வட்டப் பகுதி பிரதிநிதி), வி. விஜய் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர், திமுக இலக்கிய அணி), மயிலை தீபன் (பகுதி இளைஞரணி துணைச் செயலாளர்), எம்.புகழேந்தி (125 வது வட்டம்), ஆர்.‌‌சிறீ. செல்வி, கே. கலையரசி (திமுக 125 ஆவது வட்ட துணைச் செயலாளர்), அகல்யா (திமுக பகுதி துணைச் செயலாளர்), குமாரி மாவட்ட கிழக்கு பகுதி துணைச் செயலாளர்), கோ. கண்ணன் (126 ஆவது வட்ட திமுக), மா.பா. அன்பு (124(அ)வட்டப் பொறுப்பாளர், திமுக), தலித் கமல் (மாவட்டத் துணைச் செயலாளர்), சூ.க.சார்லஸ் (மாவட்டத் துணைச் செயலாளர்),கே. மணிகண்டன், சீமென்.கோ.அன்பு, ஜி. இராமச்சந்திரன்( விசிக, 121ஆவது வட்ட செயலாளர்), ஆ.க. எழிலன் (மாவட்டத் துணைச் செயலாளர், விசிக), ப. சரவணன், ந. வீர பெருமாள், இரா. தேன் (விசிக), எஸ். பாலாஜி (விசிக), பிரசன்ன குமார் மற்றும் பெருவாரியான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

எதிர்பாராத வகையில் மயிலை தொகுதி மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டமாக மாறிவிட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

இரா.மாரிமுத்து (மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர்) நன்றி உரையாற்றினார்.

போடி

சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி அஞ்சான் நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனை பரப்புரை கூட்டம் போடி பழைய பேருந்து நிலையம் அண்ணா பள்ளி அருகில் 28.3.2026 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

மாவட்ட கழக காப்பாளர் தொண்டறச் செம்மல் ச.ரகுநாகநாதன் தலைமை வகிக்க.. பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரையாற்ற, ம.சுருளிராசு (மாவட்ட கழகத் தலைவர்) தொடக்கவுரையாற்றினார். வழக்கறிஞர் நா.கணேசன் (துணைச் செயலாளர் கழக மாநில வழக்குரைஞரணி) சிறப்புரையாற்றினார்.

ரகுபெரியார்லெனின், வளையாபதி, வீரப்பன், சென்ராயன், சிங்கராஜ், ஓவியர் ஏழுமலை, பெரியார் மணி, தோழர் பால்பாண்டி,  கா. சரவணன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மற்றும் மகளிர் அணி தோழர்கள் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் பொறியாளர் முருகானந்தன் நன்றி கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 77ஆவது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட கழக சார்பில், மாவட்டக் கழகத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் அழகிரி அவர்களின் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் விசையேந்திரன் வரவேற்புரையாற்றினார்,  கழகப் பேச்சாளர், கடலூர் நா. தாமோதரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி, நகர செயலாளர் ஆதிசிவம், ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, நகரத் தலைவர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், ம.தி.மு.க ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ், சிபிஅய் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் மாநிலச் செயலாளர் தேனரசன், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் காவேரி நாடன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி நன்றி உரையாற்றினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் 28.3.2026 அன்று மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் திராவிடர் இயக்க போர்ப்படைத் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி நினைவு நாள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் அ.சாமிதுரை அனைவரையும் வரவேற்றார்.  நகரத் தலைவர் சீனி.முத்து தலைமையேற்றார்.

மாவட்டச் செயலாளர் கு.இளமாறன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்   இரெ.செல்லதுரை,  செயலாளர் தங்க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கி.தளபதிராஜ் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்,  கழகப் பேச்சாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் பேராசிரியர் த.ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றிகூறினார்.

இந்நிகழ்வில் குத்தாலம் நகர தலைவர் சா.ஜெகதீசன், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றியத்  தலைவர் பூ.பாண்டுரங்கன், நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் க.செல்வராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், பகுத்தறிவாளர் கழக தோழர்கள் பி இராஜேந்திரன், கே.ஜி.நாகராஜன், ஆராமதி, தமிழினி, சித்ரா ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர் தெய்வநாயகம், திமுக நிர்வாகிகள் சின்ன மாரியப்பன், ரஜினி, ஆர்.கே.சங்கர் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கழக மாவட்டத்திற்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சீனிவாசராவ் நினைவு மண்டபம் அருகில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத் பொதுக்குழு உறுப்பினர் எஸ். அன்பழகன், பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கழக சொற்பொழிவாளர் பூவை.புலிகேசி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் புகழையும், திராவிட இயக்கத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகளை செலுத்த வேண்டும், அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும் எனவும் குறிப்பிட்டார். நிறைவாக நகரச் செயலாளர் நாகராஜன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *