கடவுள் சக்தி இவ்வளவுதானா? கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி!

1 Min Read

கோவி.செழியன்திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டத்தையொட்டி ஞாயிறுதோறும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (29.3.2026) 4-ஆவது பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதற்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்ததால், நேற்று முன்தினம் (28.3.2026) இரவே கோயிலுக்கு வந்த பலர், கோயிலின் நுழைவாயில் மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நேற்று (29.3.2026) அதிகாலை 1.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக இந்த நுழைவு மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை மற்றும் சுவர் திடீரென இடிந்து அங்கிருந்த பக்தர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில், திருவையாறைச் சேர்ந்த நதியா (32) என்பவர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு நிகழ்ந்த இந்தத் துயரமான சம்பவம், பக்தர் களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் விபத்து குறித்த விசாரணை நடை பெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *