சென்னை, மார்ச் 29 நடிகர் விஜய் தனது பரப்புரைக்கான அனுமதியைப் பெறுவதில் உள்ள நடைமுறைகளைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத் தில், சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
“பரப்புரைக்கு யார் அனுமதி அளிக்க வேண்டும் என்பதை நடிகர் விஜய் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது செயலியில் (App) பதிவு செய்தாலே அனுமதி தானாகக் கிடைத்துவிடுகிறது. இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? பந்தல் அமைப்பது, எங்கு அமைப்பது போன்ற அனைத்து அனுமதி வழங்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம் தான் உள்ளது.”
முந்தைய காலங்களில் நிகழ்ச்சி நடத்த தேர்தல் ஆணைய அலுவ லகத்திற்கு நேரில் சென்று கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது தொழில்நுட்ப வசதியால் அனுமதி பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது. இருப்பினும், ஒரு நிகழ்ச்சிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி கோர வேண்டும் என்ற விதி உள்ளது. 18 அல்லது 20 மணி நேரத்திற்கு முன்பு அனுமதி கோரினால், எப்படி வழங்க முடியும்? இதற்கும் திமுகவிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்? தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகு, அரசு அலுவலர்கள் யாராவது தொந் தரவு செய்துள்ளனரா? அப்படி இருந்தால் ஆதாரத்துடன் சொல்லச் சொல்லுங்கள்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாகக் கூறினார்.
