மோடி ஆட்சியின் உபயம்! வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு எதிரொலி பிளாட்பார உணவகங்களில் 40 சதவீதம் விலை உயர்வு!

சென்னை, மார்ச் 28- ஈரான்-இஸ்ரேல், அமெரிக்காக போர் காரணமாக எரிவாயு உருளை, வாகன எரிவாயு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வணிக எரிவாயு உருளைகள் கிடைக்காததால் சென்னையின் பல்வேறு பகுதி களில் சிறு உணவகங்கள் மூடப் பட்டுவிட்டன.

சிறு உணவக வியாபாரிகள் சிலர் விறகு கட்டைகளை பயன்படுத்தி சமைத்து விற்பனை செய்கின்றனர். கடந்த 3 வாரங் களுக்கு மேலாக வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு நீடித்து வருவதால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தினக்கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கூலி தொழிலாளர்களுக்கு தினமும் சுமார் 500 ரூபாய் செலவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘’எரிவாயு உருளை தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப் படையும்’’ என சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘’வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு உருளை புக் செய்தாலும் 25 நாட்கள் கழித்துதான் கிடைக்கக் கூடிய நிலைமை உள்ளது. வீட்டில் சமைக்க முடியாத ஏழை, எளிய மக்கள் உணவகங்களில் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

வணிக எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்களும் உணவுகளின் விலையை அதிகரித்துவிட்டனர். சாலையோரக் கடைகளில் 10 ரூபாய்க்கு விற்ற இட்லி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட உணவு 160க்கும் உயரக உணவகங்களில் இது இன்னும் அதிகமாகவும் விற்கப்படுகிறது. எனவே சமையல் எரிவாயு உருளை, வணிக எரிவாயு உருளைகள் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *