கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த பா.ஜ.க. கவுன்சிலர் மகன் கைது!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பனாஜி, மார்ச் 28- கோவாவில் 30 சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் கோவா பாஜக கவுன்சிலரின் மகன் கைது செய்யப் பட்டார்.

கோவா மாநில பா.ஜ.க. கவுன்சிலர் சுஷாந்த் நாயக். இவரது 22 வயது மகன் சோஹம் நாயக். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 25 முதல் 30 சிறுமிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அந்தரங்க காட்சிகளை காட்சிப்பதிவாக எடுத்து வைத்து தொடர்ந்து பணமும் பறித்து வந்துள்ளார்.

மேலும் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது இந்த காட்சிப்பதிவுகளை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியே தெரிய வந்ததும் கோவா முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோஹம் நாயக் என்பவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் அடையாளம் காணவும், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும், விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *