ராஜஸ்தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குழந்தைத் திருமணம் ரத்து; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சட்டப் போராட்டத்தில் வென்ற இளம்பெண் பேட்டி

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜோத்பூர், மார்ச் 23- ராஜஸ் தானில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுமியின் குழந்தை திருமணத்தை நீதிமன்றம் ரத்து செய்த்து.

சம்பிரதாயம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் குஷ்பூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தினர் மத்தியில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஒரு சம்பிரதாயமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு சிறப்பு ஏற்பட்டால், அந்த ‘சடங்கின்’ ஒரு பகுதியாக குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும் சமூக புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேறு வழியின்றி பெற்றோர் உடன்படுகிறார்கள். சமுதாய பெரியவர்கள் இதை ஊக்குவிக்கும் வகையில் இத் தகைய குழந்தை திருமணத்தை செய்து வைக்கிறார்கள்.

பள்ளி செல்லும் வயதில் திருமணம்

குஷ்பூவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு 12 வயதாகி இருந்தது. பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு அந்த வயதில் குழந்தை திருமணம் செய்து வைத்து விட்டனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. வயது ஆக ஆகத்தான் திருமணத்தின் தாக்கம் அவருக்கு புரிய ஆரம்பித்தது. புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்கள், அவரை தாம்பத்திய வாழ்க்கைக்கு வற்புறுத்தத் தொடங்கினர். இனியும் திருமண பந்தத்தில் நீடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். முதலில் போலீசுக்கு சென்றார். பிறகு, சாரதி அறக்கட்டளை நடத்தி வரும் கீர்த்தி பாரதி என்ற சமூகசேவகரை அணுகினார்.

ரத்து

கீர்த்திபாரதி மூலம் குஷ்பூ குடும்பநல கோர்ட்டில் 18 மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். குஷ்பூவுக்கும், மணமகனுக்கும் 18 வயதை தாண்டிய பிறகுதான் திருமணம் நடந்ததாக புகுந்த வீட்டினர் தரப்பு வாதாடியது. ஆனால் குஷ்பூ, திருமணத்தின்போது தனக்கு 12 வயதுதான் நடந்தது என்பதற்கான ஆவணங்களையும், தனது சம்மதமின்றி திருமணம் நடந்தது என்பதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கில், குடும்பநல நீதிமன்ற நீதிபதி வருண் தல்வார் கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார். 2006-ஆம் ஆண்டின் குழந்தை திருமண தடை சட் டத்தின்கீழ், குஷ்பூவின் திருமணம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். குழந்தை திருமணம், குழந்தைகளின் தற்போதைய வாழ்க்கையையும், எதிர்கால வாழ்க்கையையும் சிறுமைப்படுத்துவதாகவும், அதை ஒழிக்க கூட்டாக சமூக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும் என் நீதிபதி கூறினார்.

பேட்டி

சட்டப் போராட்டத்தில் வென்று, மீண்டுள்ள குஷ்பூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு ஆதர வாக செயல்பட சாரதி அறக் கட்டளை முதலில் தயங்கியது. ஆனால், என்னைப்போல் குழந்தை திருமணம் செய்து கொண்ட என் சகோதரி வற்புறுத்தலாலும், எனது உறுதிப்பாட்டாலும் சம்மதம் தெரிவித்தது. 7-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய நான், திறந்தவெளி பள்ளி மூலமாக படித்து மேல் நிலைத் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். நான் படிப்பை முடித்து, தற்சார்புடன் இருக்க வேண்டும் என்பது என் சகோதரியின் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.

விடியல்

இந்த வழக்கில், திருமணத்தை ரத்து செய்வதற்கு மணமகன் தரப்பை சம்மதிக்க வைப்பது மிகவும் கடினமாக இருந்ததாக கீர்த்தி பாரதி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மணமகள் மீதான உரி மையை யார்தான் எளிதாக விட்டுக் கொடுப்பார்கள்? அதிலும் பழக்கவழக்கமும், தற்பெருமையும் சம்பந்தப்பட் டுள்ளது. இந்த வழக்கு, சட்ட தடைகளையும் மீறி, சம்பிரதாயங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டு கிறது. குஷ்பூ போல் மற்ற சிறுமிகளுக்கும் விடியல் கிடைக்க பாதை அமைத்து தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *