இஸ்ரேல் அணுசக்தி ஆராய்ச்சி மய்யம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160 பேர் காயம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெல் அவிவ், மார்ச் 23- அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 4ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலை யில், இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவிலான நெருப்புக் கோளங்கள் விழுந்து வெடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அணுசக்தி மய்யம் அமைந்துள்ள இந்தப் பகுதியில், முதல் முறையாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவித் தாக்கியுள்ளன. ஈரானின் பழைய ஏவுகணைகளிடமிருந்து அணுசக்தி நகரைக் காக்கத் தவறியதை இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் பிரதான அணுசக்தி செறிவூட்டல் தளமான நடான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தெற்கு நகரங்களான டிமோனா மற்றும் ஆராத் பகுதிகளில் ஈரான் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறைந்தது 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தடுக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்புத் துறை தவறியுள்ளது.

அணுசக்தி மய்யத்துக்கு அருகிலுள்ள வான் பாதுகாப்பை ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவிய முதல் சம்பவம் இதுவாகும். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காட்சிப் பதிவுகளில், ஏவுகணைகள் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கும்போது பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்படுவது பதிவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *