டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எப்ஸ்டீன் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதான குற்றச்சாட்டில் ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு என்ன? நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் நோக்கி, காங்கிரஸ், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வாஞ்சித் பகுஜன் அகாதி மார்ச் 23இல் பேரணி.
* அடுத்த 5 ஆண்டுகளில் (2026-2030) துறை வாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை ‘ஸ்டாலின் ஸ்டேட்மெண்ட்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வெளிநாட்டில் கட்டிப்பிடிப்பது.. இந்தியாவில் பிரிவினை பேசுவதா? மோடியே மிகப்பெரிய ஊடுருவல்காரர்: கொல்கத்தா ஈத் பெருவிழா கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா கடும் தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அமலாக்கத்துறை தாக்கீது அச்சுறுத்தலுக்கு பிறகு மேனாள் துணை குடியரசுத தலைவர் ஜக்தீப் தங்கர் பதவி விலக செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என சிவசேனா (UBT) தலைவர் ராவத் தனது புதிய புத்தகத்தில் குற்றச்சாட்டு
தி இந்து:
* வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த ஒரு உண்மையான வாக்காளரையும் நீக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் நாடாளுமன்றக் குழு அறிவுறுத்தியுள்ளது
தி டெலிகிராப்:
* நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை கையாள்வதற்கு தேவையான திசையும், உத்தியும் மோடி அரசிடம் இல்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா , புதுச்சேரி தேர்தல்களுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தக் கூடும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவு.
– குடந்தை கருணா
