சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை வகுக்க பின்வரும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
துரை. ரவிக்குமார் – பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். வன்னி அரசு – துணைப் பொதுச் செயலாளர். தலையாரி – மாநில அமைப்புச் செயலாளர். இளமாறன் – மாநில அமைப்புச் செயலாளர். கு.கா. பாவலன் – மாநில செய்தித் தொடர்பாளர். ஜெ. குணவழகன் – தேர்தல் பணிக்குழு முதன்மைச் செயலாளர்.
இந்தக் குழுவினர் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், சமூகப் பொரு ளாதாரப் பிரச்சினைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு விரிவான தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய உள்ளனர்.
விரைவில் இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாகத் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
