சென்னை, மார்ச்.12 வர்த்தக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, கோவையில் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் முகவர்களை நாடி வருகின்றனர்.
எரிவாயு சிலிண்டர்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோ கம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. கோவையில் உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப் பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, எரிவாயு முகவர் நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
காலி சிலிண்டர்களுடன், எரிவாயு முகவர் நிறுவனங்களில் மக்கள் திரண்டு வருகின்றனர். மேலும், புதிய இணைப்பு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த எரிவாயு முகவர் நிர்வாகிகள் கூறும்போது, “தற்போதைய சூழலில் புதிய எரிவாயு இணைப்பு வழங்குவது ஓரிரு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலிண்டர் மட்டும் முன்னர் பயன்படுத்திவிட்டு, தற்போது 2-ஆவது சிலிண்டர் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கும் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் வர வர, முன்பதிவு செய்துள்ள சீனியாரிட்டிபடி விநியோகிக்கப்பட்டு வருகிறது. வர்த்தக சிலிண்டர் விநியோகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப் பட்டதுதான். இன்னும் தொடங்கவில்லை” என்றனர்.
எரிவாயு முகவர் நிறுவனங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறும்போது, “புதிய சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய பிரத்யேக கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதுதொடர்பாக எரிவாயு முகவர் ஊழியர்களிடம் தெரிவித்தால் ஒரு பலனும் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் எனக் கூறுகின்றனர்.
நடவடிக்கை
மேலும், முன்பதிவு செய்து 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் புதிய சிலிண்டர் விநியோகிக்கப்படவில்லை. ஓன்றிய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
எரிவாயு முகவர் நிறுவனங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் கூறும்போது, “புதிய சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய பிரத்யே கட்டணமில்லாத எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அது தொடர்பாக எரிவாயு முகவர் ஊழியர்களிடம் தெரிவித்தால் ஒரு பலனும் இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் எனக் கூறுகின்றனர்.
மேலும், முன்பதிவு செய்து 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் புதிய சிலிண்டர் விநியோகிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை சரிசெய்ய ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
