வேளாண்துறையில் ஒரு பாய்ச்சல்! 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ரூ.125 கோடியில் தூர் வாரும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 9- தமிழ்நாட்டில் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ.125 கோடி மதிப்பீட்டிலான சிறப்பு தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று முன்தினம் (7.3.2026) தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணி

தமிழ்நாட்டில் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும், நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 7.3.2026 அன்று சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் துரைமுருகன் இப்பெரிய அளவிலான தூர்வாரும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 13 டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, கோவை மண்டலங்களைச் சேர்ந்த 11 மாவட்டங்கள் என மொத்தம் 24 மாவட்டங்களில் இப்பணிகள் நடைபெறவுள்ளன.

சுமார் 5,954.94 கி.மீ நீளத்திற்கு ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளன. ரூ.125 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். தூர்வாரும் பணிகளுடன் சேர்த்து, வேலூர் மாவட்டத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டிலான புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அம்மூண்டி தடுப்பணை

காட்பாடி அம்மூண்டி கிராமம் அருகே ரூ.46.44 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 600.80 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும்.

வெப்பாலை தடுப்பணை

காட்பாடி வெப்பாலை கிராமம் அருகே ரூ.23.08 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டவும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 600 ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “ஜூன் மாதம் மேட்டூர் அணை பாசனத்துக்காகத் திறக்கப்படும் போது, தண்ணீர் எவ்விதத் தடையுமின்றி கடைமடைப் பகுதி வரை சென்றடைய வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன. பொறியாளர்கள் இப்பணிகளைச் செவ்வனே கண்காணித்து, குறித்த காலத்திற்குள் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறைச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், தலைமைப் பொறியாளர் (பொது) சு.கோபாலகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *