சட்டவிரோதமாக வசூலித்த ரூ.11.91 லட்சம் கோடி வரி; திரும்ப செலுத்த டிரம்ப் அரசுக்கு உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், மார்ச் 5 சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்து மாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடு களுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இந்த வரி விதிப்புக்கு உலக நாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, பரஸ்பர வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாகக கூடுதலாக வசூலித்த வரியை, இறக்கு மதியாளர்களுக்கு வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறு அமெரிக்க அரசு நிர்வா கத்திற்கு வர்த்தக நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு ‘லிக்விடேஷன்’ என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் வரும்போது, ஒரு மதிப்பிடப்பட்ட தொகை செலுத்தப்படும். பின்னர், சுமார் 314 நாட்களுக்குப் பிறகு அந்தப் பொருளுக்கான தொகை இறுதி செய்யப்படும். தற்போது, இந்த வரிக் கட்டணம் இல்லாமல் பொருட்களின் விலையை இறுதி செய்து, மீதித் தொகை யைத் திருப்பி வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கூடுதல் வரி விதிக்கப்பட்ட பிறகு, சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான இறக்குமதியாளர்கள் இந்த வரிகளைச் செலுத்தியுள்ளனர். இதன் மூலம், 11.91 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட உள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடை வாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *