எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் அசிஸ்டண்ட் மற்றும், ஜூனியர் அக்க வுண்டண்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
சென்னையை அடுத்த எண்ணூரில் காமராஜர் துறைமுகம் உள்ளது. மத்திய கப்பல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த துறைமுகம் நாட்டில் உள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.
காலிப்பணியிடங்கள் விவரம்: பணியிடங்கள்: ஜூனியர் அசிஸ்டண்ட் – 11, ஜூனியர் அக்கவுண்டண்ட் – 03
கல்வித் தகுதி: இளநிலை உதவியாளர் எனப்படும் ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு பி.காம் பாடப்பிரிவில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27.02.2026 தேதிப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப் பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு: ஜூனியர் அசிஸ்டண்ட்: ரூ.25,250 முதல் 50,500 வரை. ஜூனியர் அக்கவுண்டண்ட்: ரூ.25,520 முதல் ரூ.50,500 வரை.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு, நேர்முக த்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழி தேர்வை பொறுத்தவரை 120 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம்: 90 நிமிடங்கள், கொள்குறி வகையிலான கேள்விகளாக இருக்கும். எண் திறன் / எண்கணிதம் / அளவு திறன்/ ரீசனிங்/ஆங்கில மொழி சார்ந்த கேள்விகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருக்கும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒபிசி/Ews பிரிவினருக்கு ரூ.150ம், பெண்கள், எஸ்சி/எஸ்டி, பிரிவினருக்கு ரூ.100 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.02.2026 முதல் 28.03.2026 வரை விண்ணப்பிக்கலாம் .https://kamarajarport.in/ என்ற இணையதளத்தில் Careers என்ற பக்கத்தில் தேர்வு அறிவிப்பு இடம் பெற்று இருக்கும். அதில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
