என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தக சர்ச்சை “மோடியின் கோபம் ஒரு நாடகம்” ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 1– என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப் பாட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடியின் கோபம் நாடகம்

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி வெளிப்படுத்தும் அதிருப்தி வெறும் ‘பாசாங்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே, நீதித்துறை குறித்த விமர்சனம் தனக்கு அதிருப்தி அளிப்பதாக பிரதமர் செய்திகளை கசிய விட்டுள்ளார். இது ஒரு போலியான கோபம்,” என அவர் சாடியுள்ளார்.

கடந்த பத்தாண்டு களாகப் பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு நச்சுத் தன்மையை பரப்பும் செயலுக்குப் பிரதமரே தலைமை தாங்குவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

வகுப்புவாத தலையீடு: பாடப் புத்தகங்களை மாற்றி எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள ‘நாக்பூர் கும்பலை’ (ஆர்.எஸ்.எஸ்-அய்க் குறிப்பிட்டு) வழிநடத்துவதும் வடிவமைப்பதும் பிரதமர் மோடிதான்.

கல்வியாளர்கள் மீது விமர்சனம்

பாடப்புத்தகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘போலி கல்வியாளர்கள்’ கும்பலுக்குப் பிரதமரே பொறுப்பு.

பொறுப்பைத் தட்டிக்கழித்தல்

தற்போது பிரச்சினை பெரிதானதும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர் ஒதுங்கப் பார்ப்பது அப்பட்டமான பாசாங்குத்தனம்.

8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்சநீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், இந்தப் பாடப்புத்தக மாற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

“பாடப்புத்தகங்களை மாற்றி எழுத எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து உச்சநீதிமன்றம் முழு அளவிலான விசாரணைக்கு உத்தர விட வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக அமைப்பு களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *