வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த 50 பேருக்கு காங்கிரஸ் சார்பில் புதிய வீடுகள் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வயநாடு, பிப்.27- கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் வீடுகளை இழந்த மக்களுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் 50 புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்திற்கு அக்கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நேற்று (26.2.2026) அடிக்கல் நாட்டினார்.

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு

அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்தி உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று (26.2.2026) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஊதிய உயர்வு

அனைத்து தற்காலிக கவுரவ விரிவுரையாளர் களுக்கும் மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும்.

அமல்படுத்தப்படும் நாள்

இந்த புதிய ஊதிய உயர்வு 2026 மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் பயனடைவார்கள்.

கடந்த சில நாட்களாக பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருமுறை ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்

இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 31 விழுக்காடு சரிவு!

புதுடில்லி, பிப்.27- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவுப் பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் கல்விக்காக வெளிநாடு சென்ற இந்தியர்களின் புள்ளிவிவரங்கள்படி 2023ஆம் ஆண்டு 9.08 லட்சம், 2024ஆம் ஆண்டு 7.70 லட்சம், 2025ஆம் ஆண்டு 6.26 லட்சம் என்று சரிந்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2025-ஆம் ஆண்டில் வெளிநாடு சென்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2.82 லட்சம் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக 31 சதவீதம் சரிவு ஆகும். இந்தத் திடீர் சரிவுக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் மட்டும் இன்றி, பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது:

 

கூகுள் மேப்பில்
இனி ஆதார் மய்யங்கள்

ஒன்றிய அரசு அனுமதி

புதுடில்லி, பிப்.27- நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மய்யங்களை பொதுமக்கள் எளிதில் கண்டறியும் வகையில், அவற்றை கூகுள் வரைபடத்தில் (Google Maps) இணைப்பதற்கான பணிகளை ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது.

மக்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் இந்த புதிய வசதியில் பின்வரும் சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன.

எளிதான தேடல்

பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆதார் மய்யங்களை வரைபடத்தின் மூலம் நொடிப் பொழுதில் கண்டறியலாம்.

கூடுதல் தகவல்கள்

மய்யங்கள் செயல்படும் நேரம், அங்குள்ள கூட்ட நெரிசல் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான (Parking) வசதிகள் போன்ற கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

அனைத்து சேவைகளுக்கும் வழிவகை

புதிய ஆதார் பதிவு (குழந்தைகள் மற்றும் முதியவர்கள்), முகவரி மாற்றம், கைப்பேசி எண் புதுப்பிப்பு போன்ற பணிகளை தடையின்றி மேற்கொள்ள இது உதவும். இந்த முன்முயற்சி குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மிக விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *